[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

'செய்தித்தாளில் உணவு பொட்டலம் கட்டக் கூடாது'... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

the-newspaper-should-not-build-on-the-food-packages

உணவுப் பண்டங்களை செய்தித்தாள்களில் மடித்து வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எ‌ன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: உணவு பண்டங்களை செய்தித்தாள்களில் மடித்து கொடுப்பதை வியா‌பாரிகள் கைவி‌ட வேண்டும். இந்‌த நடைமுறையைக் கட்டுப்படுத்த இ‌ந்திய உணவு தர பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நட்டா அறிவுறுத்தியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்தை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.

செய்தித்தாள்களின் அச்சுக்களில் காரீயம் உள்ளதாகவும், உணவுப் பண்டங்களை செய்தித்தாள்கள் மூலம் வாங்கும் போது, அதில் உள்ள காரீயம் உடலுக்குள் சென்று வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close