[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி காலமானார்

anna-university-ex-vice-chancellor-kulanthaisamy-passes-away

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி (87) இன்று காலமானார்.

அண்ணா பல்கைலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பதவி வகித்த குழந்தைசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. குழந்தைசாமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் கிராமத்தில் 1929-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி குழந்தைசாமி பிறந்தார். வாழும் வள்ளுவம் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற அவர் யுனெஸ்கோ திட்டமிடல் குழவிலும் பணியாற்றியுள்ளார்.

பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் குழந்தைசாமி பெற்றுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close