[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கரையைக் கடக்கும் முன் 'வர்தா' புயல் வலுவிழக்க வாய்ப்பு..!

vardha-strom-was-opportunity-to-weaken

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘வர்தா’ புயல் வலுவிழந்த நிலையில் ஆ‌‌ந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாகபட்டினத்‌தில் இருந்து 9‌50 கி.மி தொலைவில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள புயல் வரும் 12-ஆம் தேதி நெல்லூர் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடப்பதற்கு முன்பாக புயலானது ‌சற்று வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வர்தா’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வடமேற்கு நிலையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இன்று முதல் மீனவர்கள் யாரும் ஆந்திரா கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close