[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

tamilnadu-cabinet-meeting-today

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். இவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமாக 50 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டம் 12.20 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லம், காவிரி மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு அனைத்து அமைச்சர்களும் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து மீண்டும் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மறைந்த முதலமைச்சரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close