[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

அதிமுகவில் புதிய பொறுப்புகளை கோருவதாக வந்த தகவல்கள் தவறானவை: செங்கோட்டையன்

aiadmk-false-reports-carries-new-responsibilities-sengottaiyan

அதிமுகவில் புதிய பொறுப்புகளை கோருவதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாழ்நாள் முழுவதும் இயக்கத்திற்கும், தலைமைக்கும் உண்மையான தொண்டனாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். தம்மை குறிவைத்து, குழப்பத்தை உருவாக்க நினைத்து உண்மைக்கு மாறான செய்திகளை சிலர் பரப்பி வருவதாக அவர்கூறியுள்ளார். உயிர் மூச்சு உள்ளவரை இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். வீண் வதந்திகளையும், பொய் பரப்புரைகளையும் பரப்புவோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close