[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஜெயலலிதா மறைவு குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது ஏன்?...நடிகை கவுதமி விளக்கம்

actress-gaudami-exclusive-interview-about-jayalalithaa-health-issue

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக சந்தேகம் என்பதற்கு முன்பாக, அவருக்கு என்ன நடந்தது என்பதே மர்மமாக உள்ளது. அதைத் தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வமும் உண்டு உரிமையும் உண்டு எனக் கூறியுள்ளார்.

மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர். பொறுப்பு மிக்க தலைமைப் பொறுப்பில் இருந்தவரின் மரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது என கவுதமி கூறியுள்ளார். தாம் கேட்கும் கேள்வி தன்னுடையது மட்டும் அல்ல எனவும் நாட்டில் உள்ள பெரும்பான்மையானோர் எழுப்பும் கேள்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தான் மக்களில் ஒருவன் என்றும் தன்னை யாரும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் எனவும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய கவுதமி, அந்த நம்பிக்கையில் அவருக்கு கடிதம் எழுதியதாகத் தெரிவித்துள்ளார். தாம் எழுதிய கடிதம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் அந்தக் கடிதத்தைத் தான் மக்களின் குரலாக பதிவு செய்தது தனக்குப் பெருமையாக உள்ளதாகவும் கவுதமி கூறியுள்ளார். தமது கடிதத்திற்கு பிரதமர் விரைவில் பதிலளிப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை அருங்காட்சியமாக மாற்றுவது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவை போற்றும் வகையில் அவரின் சாதனைகள் குறித்த விளக்கங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுதமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close