[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டும்... மு.க.ஸ்டாலின்

admk-mp-to-demand-cauvery-management-board-in-parliament-mk-stalin

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி நதிநீர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும், கர்நாடகா தமிழகத்திற்கு 2000 கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கக்கத்தக்கது எனக் கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள், மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போது புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஸ்டாலின், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close