[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சென்னையில் 2-ஆவது நாளாக வருமான வரித்துறையின் சோதனை தொடர்கிறது

income-tax-raid-continues-in-chennai-for-the-2nd-day

சென்னையில் வருமான வரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதில் 107 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளாகவும், தங்கமாகவும் சில தொழில் அதிபர்கள் மாற்றி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வருமான வரிதுறையினர் சென்னை, வேலூர் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொழிலதிபர்களான சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி, பி‌ரேம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 107 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்றும் சென்னையின் 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர்கள் 3 பேரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close