[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி கல்லூரிகள் இன்று திறப்பு

school-colleges-opened-after-3-days-holiday

தமிழகத்தில் 3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து 6-ஆம் தேதியிலிருந்து 3 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளியில், அவருக்கு மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டவுடன் காலைநேர கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக மாணவ-மாணவிகள் அவரவர் விருப்பமான முறைப்படி அஞ்சலி செலுத்தலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close