[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மேலும் ஒரு விபரீதம்.... வங்கியில் பணம் எடுக்க சென்றவ‌ர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

one-person-died-in-bank

மதுரை வங்கியில் காசோலை செலுத்தி பணம் எடுக்க பல மணி நேரம் காத்திருந்தவர் மாரடைப்பால் வங்கியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை கீழ ஆவணி மூல வீதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், அவனியாபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். வியாபாரத்திற்கு தேவையான பணத்தை எடுப்பதற்காக காசோலையுடன் பழங்காநத்தத்திலுள்ள கனரா வங்கி கிளைக்கு அண்ணாமலை வந்தார். அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அண்ணாமலையை வங்கி ஊழியர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வங்கிக்கு வருவதற்குள்ளேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சுப்பரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த வாரம் தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது, வங்கியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் முன்வராமல், பலரும் அதனை செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close