[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

சென்னையில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.90 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல்

rs-90-crore-in-cash-of-which-70-crore-are-new-notes-and-100-kgs-of-gold-seized-in-the-raid-by-it-dep

சென்னையில் ஒரே நேரத்தில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் ரூ.90 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளாகவும், தங்கமாகவும் மாற்றியதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து ‌வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 இடங்களில் தொழிலதிபர்கள் சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி, பி‌ரேம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஒரு இடத்திற்கு 20 அதிகாரிகள் என மொத்தம் 160 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையில் இதுவரை, கணக்கில் காட்டப்படாத ரூ.90 கோடி ரொக்கம், 100 கிலோ ‌கிராம் தங்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்ப‌ட்டுள்ளன. 90 கோடி ரூபாயில் 70 கோடி ரூபாய்‌, புதிய ரூபாய் நோட்டுக் கட்டுகளாக இருந்தது. தங்கக் கட்டிகள் எப்படி கிடைத்தது? பணம் எப்படி வந்தது? என்ற கோணத்தில் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close