[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஆந்திராவை மிரட்டும் வர்தா புயல்.. வட தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு

vardah-cyclone

வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திர கடற்கரையை வரும் 12ம் தேதி கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வர்தா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே வரும் 12ம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் வரும் 11ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும், வட தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் வரும் 10ம் தேதி முதலே கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close