[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு.. பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி..போட்டோவுக்கு தடை

no-photographs-in-poes-garden

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரையில் பொதுமக்களும், தொண்டர்களும் இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை பார்க்க வருகின்றனர். ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் காவல் துறையினரால் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வீட்டை யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதற்காக அவர்களிடம் உள்ள செல்போன், கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வீட்டை பார்த்துவிட்டு வந்த பிறகு ஒப்படைக்கப்படுகிறது.

மேலும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் வீடு அருகே செல்லவே காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close