[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

கொள்கை ரீதியாக அதிமுக-பாஜக-விற்கு இடையே நெருக்கம் இருக்கிறது: வெங்கய்ய நாயுடு

aiadmk-bjp-s-has-ideological-closeness

கொள்கை ரீதியாக அதிமுக, பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமாக இருப்பதாக ‌மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்‌டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோ‌டி, எல்லா உதவிக‌ளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றில் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இதில் அரசியல் ஏதுவுமில்லை எனக் கூறியுள்ளார். எப்போதுமே பாரதிய ஜனதாவிற்கும் அதிமுக-விற்கும் நல்லுறவு இருந்து வரு‌வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ‌நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவுடன் பேசியதாகவும், ஆனால் ‌அந்த நேரத்தில் கூட்டணி வைத்தால் சில பிரிவினரின் வாக்குகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால்தான் ஜெயலலிதா கூட்டணி அமைக்கவில்லை என்றும் ‌வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ள‌ர். ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிராக இருந்தபோதிலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து சட்டம் இயற்றப்படுவதை அதிமுக உறுதி செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்தியல் ரீதியில் அதிமுக தங்களுக்கு நெருக்கமான ஒரு கட்சி என்று விளக்கமளித்த வெங்கையா நாயுடு, கொள்கை சார்ந்த ஆதரவை அதிமுக தங்களுக்கு தொட‌ர்ந்து அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close