[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு

free-food-to-people-who-came-to-pay-homage-to-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் கடந்த 6-ஆம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக 3-ஆவது நாளாக இன்றும் ஏராளமான தொண்டர்கள், பல்வேறு ஊர்களில் இருந்து அங்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்கள் பசியின்றி செல்வதற்கு ஏற்ப, அவர்களுக்கு அதிமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இட்லி, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் அடங்கிய பொட்டலங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

உணவு பொட்டலங்களை வாங்கிச் செல்லும் மக்கள் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதும் எங்களை பசியில்லாமல் வாழ வைத்தார். இப்போது அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த வருகையிலும் எங்களை பசியில்லாமல் வாழ வைக்கிறார் என கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close