[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மாற்ற அனுமதி

auto-fees-revised-permission-is-customized-to-state-government

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளிள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பின் செயலாளர் லோகு என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகையால், போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்களை ஆட்டோக்களில் எழுதி வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளித்தால், குறுஞ்செய்தி மூலம் பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழக அரசு சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, தமிழக அரசின் மனுவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.‌
இதனை ஏற்ற நீதிபதிகள், 2014-இல் கடைசியாக ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்டதால், கட்டணங்களை உயர்த்தியோ, குறைத்தோ மாற்றியமைப்பது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர். இது தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 24-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close