[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெயலலிதா மறைவு.. துக்கம் தாங்காமல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

admk-announced-financial-assistance-to-77-families

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு மற்றும் உயிரிழப்பு காரணமான, அதிர்ச்சியில் இறந்த 77 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவியை அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மறைவு தாங்காமல், மனவேதனையால் அகால மரணமடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில், குடும்ப நல நிதியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதால் துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர் சிகிச்சை பெறுபவருக்கு 50,000 ரூபாயும், துக்கத்தில் விரலை துண்டித்துக் கொண்டவருக்கு சிகிச்சை ஏற்பாட்டுடன் 50,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close