[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க நடவடிக்கை

start-the-construction-of-a-memorial-to-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் நடவடிக்கையாக அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திலேயே ஜெயலலிதாவின் உடலும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நாடு போற்றும் இரும்பு பெண்மணியான ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் நடவடிக்கையாக, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதற்கான அளவெடுக்கும் பணிகளையும் பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close