[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சோ ராமசாமி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

rajini-pays-last-respect-to-cho-ramasamy

மறைந்த சோ ராமசாமி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி(82) மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் எம்ஆர்சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சோ உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன் நெருங்கிய நண்பரான சோ ராமசாமி பத்திரிகை துறையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்கியவர் என்றும் தன் வாழ்நாளில் யாரிடமும் பொய் சொல்லாதவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவருடைய பேச்சுக்கும், சிந்தனைக்கும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களிடமும் மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்திற்கு தனது அழ்ந்த அனுதாபங்களையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சோ ராமசாமியின் உடல் இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close