[X] Close
JUST IN
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

சோ ராமசாமி கடந்து வந்த பாதை...

cho-ramasamy-life-history

எழுத்து, நடிப்பு என பன்முகத் திறன் கொண்ட சோ ராமசாமி(82) இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தருணத்தில் அவர் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்...

1934-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி சோ.ராமசாமி பிறந்தார். இளநிலை அறிவியலில் பட்டப்படிப்பும், இளநிலை சட்டப்படிப்பும் முடித்தவர். 1957-ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார். அதேசமயத்தில், 1957-ஆம் ஆண்டு முதல் நாடகங்களையும் எழுதத் தொடங்கினார். பன்முகத் திறன் கொண்ட சோ, 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்த அவர், 4 திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். 1970-ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கிய அவர் 1976-ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழையும் தொடங்கினார். 1999-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக, 1985-ஆம் ஆண்டு ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-இல் வீரகேசரி விருதும், 1994-ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998-ஆம் ஆண்டு நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

சினிமாத் துறையில் பலருடன் நட்பு கொண்டிருந்த சோ, எம்ஜிஆர் உடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். இதனால் அவருடன் இணைந்த நடிக்க சோ-விற்கு அதிக வாய்ய்புகள் கிடைத்தது. சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடனும் நடித்துள்ளார். இதேபோல், இந்திய அரசியலில் பல அரசியல் தலைவர்களிடம் நட்பு வைத்திருந்த சோ, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும் ஆவார். ஜெயலலிதா மறைந்த இரண்டாவது நாளிலே சோ-வும் காலமானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சோ ராமசாமி உடல் இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close