[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தொடரும் டிசம்பர் மரணங்கள்... சோகத்தில் மூழ்கும் தமிழகம்..!

deaths-in-december

தமிழக அரசியல் களத்தில் முக்கிய ஆளுமைகளாக விளங்கிய தலைவர்களில் சிலர் டிசம்பர் மாதத்திலேயே மறைந்துள்ளனர்.

பகுத்தறிவுத் தந்தை எனப் போற்றப்படும் தந்தை பெரியார், கடந்த 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி மரணமடைந்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, அதாவது பெரியார் மறைந்த அடுத்த நாள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த ராஜாஜி காலமானார்.

1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். தற்போது 2016-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியான நேற்று முன்தினம் தமிழகத்தின் முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா மறைந்தார்.

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close