[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி காலமானார்

thuglak-founder-and-editor-cho-ramaswamy-passes-away

துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த நடிகருமான சோ.ராமசாமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சோ ராமசாமிக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ‌3.58 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக சோ-வுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.

சோவின் உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் சோவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் அரசியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குபவராகவும் சோ இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சோ-வை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதும் நினைவு கூறத்தக்கது.

மறைந்த சோ-விற்கு ஒருமகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close