[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஜெயலலிதாவின் அரசியல் பயணமும்... ராஜாஜி அரங்கமும்...

jayalalithaa-start-to-politics-in-rajaji-hall

சென்னை ராஜாஜி அரங்கம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்வில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் மறக்க முடியாதது.

1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உடல், ராஜாஜி அரங்கத்தில்தான் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலின் அருகே சென்று நிற்க முயன்ற ஜெயலலிதாவை, அதிமுகவில் அவருக்கு எதிரணியில் இருந்த சிலர் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

ஒரு மூலையில் சோகத்துடன் அமர்ந்திருந்த ஜெயலலிதா. அடக்கம் செய்வதற்காக எம்ஜிஆரின் உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றியபோது எழுந்து பின்னாலே சென்றார். வண்டியில் இருந்த எதிரணியைச் சேர்ந்த சிலர், ஜெயலலிதா வாகனத்தில் ஏறுவதைத் தடுத்தனர். பிடித்து இழுத்து கீழே தள்ளினர். 1982ஆம் ஆண்டிலேயே அதிமுகவில் ஜெயலலிதா சேர்ந்திருந்தாலும், இந்த நிமிடத்தில்தான் அவரது அரசியல் பயணம் வேகமெடுத்தது. எம்ஜிஆரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலாத ஜெயலலிதா, பின்னர், சிதறிய கட்சியை ஒருங்கிணைத்து, 4 முறை ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராகி இறுதியாக தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்திருப்பது அதே ராஜாஜி அரங்கில்தான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close