[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

jayalalithaa-buried

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவு வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவே எடுத்துச்செல்லப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பொதுமக்கள் மறைந்த ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி

பின்னர் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டது. இங்கு பல்லாயிரக்கணக்காக மக்கள் ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக், உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் ஜெயலலிதாவின் உடலக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், கேரள ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், வீரமணி, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

இதேபோல் சினிமா பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, பிரபு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, விஷால், தனுஷ், சுகன்யா, சுஹாசினி, குஷ்பு, சரோஜா தேவி, கௌதமி, நயன்தாரா, இயக்குனர்கள் பாரதிராஜா, பார்த்திபன், எஸ்.ஜே.சந்திரசேகர், பாக்கியராஜ், டி.ராஜேந்திரர், அமீர், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்ல ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

பீரங்கி வண்டியில் ஜெயலலிதா உடல்

பின்னர் 4.30 மணியளவில், ஜெயலலிதா உடல் தங்கப்பேழையில் வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ஏற்றப்பப்பட்டு இறுதி ஊர்லவம் தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா வைக்கப்பட்டிருந்த பீரங்கி வண்டி, ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் வரை ஊர்ந்து சென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள், ஜெயலலிதா வைக்கப்பட்டிருந்த வண்டியின் பின்னால் கண்ணீர் மல்க வந்தனர்.

நல்லடக்கம்

5.40 மணியளவில் இறுதி ஊர்வலம் மெரினா வந்தடைந்து. பின்னர், முப்படை வீரர்கள் ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதனையடுத்து, ஜெயலலிதாவின் தோழியான சசிசலா, ஜெயலலிதா உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார். பின்னர் 60 குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close