[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

ஜெயலலிதா மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல்

thirunavukkarasar-mourned-to-jayallaitha

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களால் அன்போடு “அம்மா” என்று அழைக்கப்பட்டவர், ஜெயலலிதா. துணிச்சலும், மனதைரியமும், விடாமுயற்சியும், நிர்வாகத்திறனும், அறிவாற்றலும் நிறைந்தவர். ஜெயலலிதா அவர்களோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவன் என்பதால் அவரது மறைவு எனக்கு மிகுந்த மனத்துயரத்தை தருகிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அதிமுக கழக நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close