[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஜெயலலிதா உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

people-tearful-tributes-to-jaylalithaa

சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணி அளவில் காலமானார். ஜெயலலிதா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக பொருளார் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மற்றும் சினிமா பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், நடிகைகள் கவுதமி, சுஹாசினி, வெண்ணீராடை நிர்மலா, சச்சு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close