[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

'இந்திய நாடு தனது வீர புதல்வியை இழந்து தவிக்கிறது'... ஜெயலலிதா மறைவுக்கு ரஜினி இரங்கல்

rajini-condoles-jayalalithaa-s-demise

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் இந்திய நாடே, தனது வீரப்புதல்வியை இழந்து தவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, இதயம் செயலிழந்ததால் நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு குறித்து டுவிட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ள ரஜினி, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close