[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

apollo-announce-cm-jaya-s-demise

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலலிதா காலமானார்.

நேற்றிரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டன. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பிலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோர் வந்து அதிநவீன சிகிச்சைகளை அளித்து வந்தனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, அப்போலோ மருத்துவமனை முன்பு குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் கதறி அழுதனர். அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போயஸ் தோட்டத்திற்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. பின்னர், மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close