[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

admk-mlas-meeting-starts-in-royepettah

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் கூட்டம் மாலையே தொடங்கும் என்பதால் அவர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குழுமினர். ஆனால், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து வர தாமதம் ஆனதால் கூட்டம் தொடங்கவில்லை. இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குத் திரும்பியதால், எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close