[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை.. உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் விளக்கம்

law-and-order-in-tn-is-stable-governor-informs-hm-rajnath

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கமளித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் ஊடகங்கள் வாயிலாக பரவியது. இந்த தகவலை மறுத்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் உடனடியாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மற்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்திடம், ஆளுநர் விளக்கமளித்ததாகத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close