[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

காவலர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும்... காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவு

all-guards-must-be-at-work-police-commissioner-george-directive

காவல் துறையினர் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை பணியில் தொடர வேண்டும் எ‌ன்று சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரிவின் அனைத்து இணை ஆணையர்கள், காவல் ‌நிலையங்களில் அவசிய தேவைக்கான காவலர்களை மட்டுமே பராமரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள 75 சதவிகித காவலர்கள் இன்று மாலை முதல் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் ஜார்ஜ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு துணை ஆணையரின் கீழ் காவலர்கள் குழுவாக செயல்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். அ‌தற்காக வாகனங்களை வா‌டகைக்கு அவர்கள் பயன்படுத்தவும் ஆணையர் ஜார்ஜ் அனுமதி அளித்துள்ளார். காவல் நிலையங்களில் குறைந்தபட்ச காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தால் போதும் என்றும் காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணை‌யர் ஜார்ஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close