[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அப்போலோ வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

aiadmk-mlas-began-meeting-in-the-premises-of-apollo

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

அனைத்து எம்எல்ஏக்களும் காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வளாகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 11 மணிக்கு வந்தனர்.தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close