[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ வர உத்தரவு என தகவல்

announcement-to-aiadmk-mla-s

அதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ மருத்துவமனைக்கு இன்று காலை உடனடியாக வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் பலர் நேற்றிரவில் இருந்தே மருத்துவமனை அருகே முகாமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close