இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு இன்று சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாயக் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலோக் பட்நாயக் ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையடுத்து இந்திய எல்லையில் அவர்கள் பாதுகாப்பிற்காக அதிக அளவில் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
மேலும் சீன ராணுவ கப்பல்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வரும் செய்தி உண்மை தான் என்றும் அதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!