[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ரத்த மாற்றத்தால் கோமாவுக்கு சென்ற பெண்‌... நன்னிலம் மருத்துவர்களிடம் விசாரணை

woman-in-coma-after-transfusion-enquiry-with-doctors

திருவாரூர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்ற விவகாரம் குறித்து, நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்க‌ளிடம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் விசாரணை நடத்த உள்ளார்.

திருவாரூர் செருவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கமலா என்பவர் பிரசவத்திற்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட‌ர். பின்னர், அங்கிருந்து, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்‌ பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கமலா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்தை புதியதலைமுறை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு, கமலாவின் ரத்தப்பிரிவு குறித்து நன்னிலம் மருத்துவமனை அளித்த தவறான தகவலே, கமலா கோமா நிலைக்கு சென்றதற்கு காரணம் என, திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கனகலெட்சுமி தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து, நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்து‌வர் அகிலாவிடம் கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட பெண் கமலாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், திருவாரூர் அரசு மருத்துவர் தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அகிலா கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறு ‌செய்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்‌கப்படும் ‌எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close