[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தவறான வகை ரத்தம் ஏற்றியதால் கோமா நிலைக்குச் சென்ற பெண்.. அரசு மருத்துவமனையின் அலட்சியம்

the-girl-went-into-a-coma-for-delivery

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு தவறான வகை ரத்தம் செலுத்தப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் செருவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கமலா என்பவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருத்தரித்துள்ளார். ‌பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்தது. ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி பி நெகட்டிவ் ரத்தத்திற்கு பதிலாக பி பாசிட்டிவ் ரத்தத்தை மருத்துவர்கள் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால், கமலா, கோமா நிலைக்கு சென்றுள்ளார். மருத்துவர்களின் அலட்சியத்தால் கமலா தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close