[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

tiruvannamalai-temple-festival-begins-today

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கடைசி நாளில் பரணி தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில் இன்று காலை தீபத் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தீபத்திருவிழாவின் கடைசிநாளான வரும் 12-ஆம் தேதி அதிகாலை‌ பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் மகாதீபமும் ஏற்றப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்‌கள். எனவே, வரும் 12-ஆம் தேதி ‌தமிழகம் முழுவதும் இருந்து 2600 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close