[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சென்னை வடபழனி, அண்ணா‌நகரில் புதிய மேம்பாலங்கள் திறப்பு

3-bridges-opend-in-chennai

வடபழனி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் நேற்று திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. வடபழனி 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 2 அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. முதல் மேம்பாலத்தில் வாகனங்களும், 2-வது மேம்பாலத்தில் மெட்ரோ ரயிலும் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்தும் தொடங்கிவிட்டது. இதனையடுத்து, தற்போது வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலங்கள் நேற்று திறக்கப்பட்டது.

அதேபோல அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்ட ‌2 புதிய மேம்‌பாலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு நேற்று திறந்துவிடப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்கள் திறக்கப்பட்டதால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும் புதிய மேம்பாலங்களால் பய‌ண நேரம் குறைவதாகவும் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, புதிய மேம்பாலங்களில் வழிகாட்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close