[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள மேடை

inclined-surface-made-in-marina-for-disabled-persons

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகள் சுலபமாக சென்று வர சாய்தள மேடைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள இந்த சாய்தள மேடைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது ‘சாய்தள மேடைகள் அமைத்ததன் மூலம் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக கடற்கரைக்கு வந்து செல்ல முடியும் என்றும் கடலோர பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று கடற்கரை வரை சாய்தள மேடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியுமின்றி கடற்கரைக்கு வந்து செல்ல முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Chennai disabled inclned surface marina
Advertisement:
Advertisement:
[X] Close