[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

மதுரை, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..ரூ.2 கோடி பறிமுதல்

old-currency-notes-seized

மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக வெளிநாட்டு பணத்துக்கு உள்நாட்டு ரூபாய்கள் மாற்றப்படுவதாக வந்த புகாரையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை, சென்னை தியாகராயர் நகர் உள்ளிட்ட 6 இடங்களிள் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் மொத்தமாக ரூ. 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பழைய ரூ.500,1000 செல்லாத நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் போது இது கண்டுபிடிக்கப்பட்டது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close