[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

நாகை அருகே கரையை கடந்தது நடா புயல்

nada-crosses-kaaraikkal-leads-to-low-rain-in-tamilnadu

‘நடா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் நாகை அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நடா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்தது. இந்நிலையில் ‘நடா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நாகை அருகே கரையை கடந்துள்ளது. தற்போது நாகைக்கு மேற்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close