[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!

kadalur-precautions-taken-to-avoid-damages-due-to-rain

நாடா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் தயார்நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. கடலூர், கடலூர் துறைமுகம், சிப்காட், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், ஜெயங்கொண்டம், நாகை, நெல்லிக்குப்பம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து மேடான பகுதிகளுக்கு செல்ல அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பொதுமக்களை மரங்கள் அருகில் செல்லவேண்டாம் என்றும், மின்சாதன பொருட்களை கவனத்துடன் உபயோகப்படுத்துமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள 15 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 225 பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரங்கள் அறுக்கக்கூடிய கருவிகள் உள்ளிட்டவற்றுடன் தயார் நிலையில் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close