[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சென்னையில் இருள் சூழ்ந்த வானம் ..காலை முதலே பரவலாக மழை..வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

widespread-rain-in-chennai

சென்னையிலிருந்து தென்கிழக்கே 350 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள நாடா புயலால், சென்னை மெரினா, பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னைக்கு தென்கிழக்கே வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. நாடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கே 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 290 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து யாரும் கடலுக்கு செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை மெரினா, பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காசிமேடு துறைமுகம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர.

சென்னையில் வானம் இருள் சூழ்ந்த நிலையில் இன்று காலையில் இருந்தே மழை விடாமல் பெய்து வருகிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது பாதுகாப்பான முறையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close