[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

நாடா புயலை எதிர்கொள்ள தயாராக புதுச்சேரியில் 179 பாதுகாப்பு மையங்கள்

nada-storm-179-care-centers-constituted-in-puducherry

நாடா புயலை எதிர்கொள்வதற்காக புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநில வளர்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் கடந்த 29 - ஆம் தேதி உருவான நாடா புயல் வலுப்பெற்றுள்ளதால் கடலோ‌ர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடா புயல் புதுச்சேரியிலிருந்து 290 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த புயல் நாளை அதிகாலை புதுச்சேரி- வேதாரண்யம் அருகே கடலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக களத்தில் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மாநில வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close