[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

நாடா புயல் எச்சரிக்கை.. தேசிய மீட்புக் குழுவினர் கடலோர மாவட்டங்களில் முகாம்

cyclone-nada-alert-for-tamil-nadu-national-rescue-committee-arrival-cuddalore

நாடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு தேசிய மீட்புக் குழுவினர் வருகை‌ தந்துள்ளனர்.‌

சென்னைக்கு தென்கிழக்கே வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. நாடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. நாடா புயல் நாளை காலை கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மீட்புக் குழு வருகை

இந்நிலையில் நாடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மாவட்டத்திற்கு தேசிய மீட்புக் குழுவினர் வருகை‌ தந்துள்ளனர்.‌ அதன்படி, அரக்கோணத்திலிருந்து வ‌ந்த 80 பேர் கொண்ட குழுவில், ஒரு பகுதியினர் கடலூரிலும், மற்றொரு பகுதியினர் சிதம்பரத்திலும் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, கடலூரில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற‌ மீனவர்கள் கரை திரும்புவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.‌ பின்னர், கடுமையான போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கரை திரும்பினர்‌.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலெட்சுமி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close