[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

நெருங்கும் புயல்.... பொதுமக்களை இவற்றை பின்பற்ற அலர்ட் செய்கிறது வருவாய் துறை..!

cyclone-nada-things-to-do-precautions

நாடா புயல் தமிழகத்தை நோக்கி வருவதால், புயல் வீசும் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக வருவாய்த்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

நீர் நிலைகள் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்பவர்கள் நீர் சூழ்வதற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.

* சமைக்காமல் பயன்படுத்தக்கூடிய பிஸ்கட், ரொட்டி, பழங்கள் போன்ற உணவு வகைகளையும், குடிநீரையும் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்‌. ‌

* வெள்ள நீரில் செல்ல நேர்ந்தால் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

* மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு இருப்பதால் வீதிகளில் கவனமாக நடந்து செல்ல வேண்டும்.

* பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அங்கிருந்து வெளியேறக்கூடாது புயல் தொடர்பாக வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமே பிறரிடம் தெரிவிக்க வேண்டும்.

* வீடுகளை வெள்ள நீர் சூழும் முன்னரே விலை உயர்ந்த பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close