[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

நெருங்கியது 'நாடா' புயல்.... தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?!

nada-storm-state-of-the-precautionary-principle

வடகிழக்கு பருவமழை மற்றும் ‘நாடா’ புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்‌ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உ‌றுப்பினர் ஆலோசனை நடத்தினார். இதன் பின் பேசிய அதிகாரிகள் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், மீட்புக் குழுக்கள் 5 முதல் 15 நிமிடத்திற்குள் சென்றடைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ‌இதற்கிடையில் நாடா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்காக சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 45 பேர் வந்துள்ளனர். மீட்புப்பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது தவிர மற்ற 4 குழுக்கள் புயல் அபாயம் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close