[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

dmk-chief-karunanidhi-admitted-in-kauvery-hospital

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருந்துகளால் ஏற்பட்ட உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். மேலும் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள், அவரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close