[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

திரைப்படங்களுக்கான வரிவிலக்கால் என்ன பயன்?.. நீதிமன்றம் கேள்வி

cbfc-tax-exemption-not-use-govt-and-puplic

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கினால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பலன் அடைவதாகவும், இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பலன் ஏதும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையின் போது, வரிவிலக்கு பெற்ற படங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கும் குழுவில் உள்ளவர்களின் தமிழ்ப்புலமை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2006 ‌ஆம் ஆண்டு முதல் 2016 ‌ஆம் ஆண்டு வரைக்கும் 2,014 படங்களுக்கு; வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் இன்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு கட்டணத்தை 3‌0 சதவீதம் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் எனவும், வரி விலக்கு அளிக்கும் முறையால் தயாரிப்பாளர்களுக்கு சலுகை காட்டுவது போல் உள்ளது என்றும். மேலும், திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் அளிப்பதில் கண்மூடித்தனம் காட்டக்கூடாது என்று தெரிவித்த நீதிபதி, வரி விலக்கினால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பலன் அடைவதாகவும், இதனால் தமிழ் வளர்ச்சிக்கோ, பார்வையாளர்களுக்கோ பலன் ஏதும் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close