[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகம் முதலிடம்..சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு விருது

tamilnadu-topped-in-organ-donation

உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இந்த விருதை வழங்கினார். இந்த விருதை தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விருதை தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெறுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிறந்த மருத்துவமனைகள் பிரிவில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செந்தில் என்பவருக்கு வழங்கப்பட்டது.

தனி ஆணையம்

விருது பெற்றது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தனி ஆணையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.மேலும் அந்த ஆணையத்திற்கு அவரே தலைவராகவும் உள்ளார்.முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆணையம் செயல்படுவதால் இந்த இலக்கை அடைய முடிந்திருக்கிறது.தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு முதல்வரின் காப்பீட்டுத்திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது. இதயம்,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவச் செலவுகளுக்கு ஆகும் தொகை அரசால் வழங்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்த பின்பு அவர்களுக்கு மாதம்தோறும் அரசு மருத்துவமனை மூலம் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு 1000 பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close